Published on 02/05/2021 | Edited on 02/05/2021

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
திமுக வெற்றிமுகம் கொண்டிருக்கும் நிலையில் திமுக வெற்றி பெற்றதற்கு ஸ்டாலின் பேச்சும், மக்களின் ஆதரவு முக்கிய காரணமாக உள்ளது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''புதிய அத்தியாயத்துடன் தமிழகம் தொடங்கியுள்ளது. திமுக வெற்றி பெற்றதற்கு ஸ்டாலின் பேச்சும் மக்களின் ஆதரவும் முக்கிய காரணம்'' என தெரிவித்துள்ளார்.