Published on 04/06/2019 | Edited on 04/06/2019
நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கலைஞரின் 96ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.அதி திமுக கூட்டணியில் இடம் பெற்ற அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.அந்த விழாவில் ஸ்டாலின் பேசும் போது, ஸ்டாலின் கனவு காண்கிறார் என என்னை கிண்டல் செய்தார்கள். ஆனால் மக்கள் அவர்களின் கற்பனையில் மண்ணை அள்ளி போட்டுவிட்டார்கள்.

இன்னும் சிலர் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக தெரிவித்தார்கள்.தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை. ஸ்டாலின் இருக்கக் கூடிய இடம் இது. கருணாநிதியின் மகன் நான் இருக்கிறேன் என்று ஸ்டாலின் பேசியது அரசியலில் பெரும் பரபரப்பாக பார்க்கப்பட்டது.இந்த பதில் ரஜினிகாந்தை குறிப்பிட்டு பேசியது போல் இருந்தது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.