Published on 27/01/2021 | Edited on 27/01/2021

சசிகலா இன்று சிறையிலிருந்து விடுதலை ஆனதையொட்டி அமமுக சார்பில் பல்வேறு இடங்களில் வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் தில்லை நகரில் உள்ள மாநகர் மாவட்ட கழக அலுவலகத்திலிருந்து, கழக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று தில்லைநகர் சாலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கியும் சசிகலா விடுதலையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், பகுதி கழகச் செயலாளர்கள் தன்சிங், ரமேஷ், சதீஷ்குமார், வேல்முருகன் மற்றும் அணி செயலாளர்கள் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தனர்.