கடந்த சில மாதங்களாக திமுக 15வது அமைப்புத் தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே, ஒன்றியம், பேரூர், நகரம் உள்ளிட்ட கிளைக்கழக நிர்வாகிகள் தேர்தல் படிப்படியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்து வேட்புமனுக்கள் செப். 22 முதல் 25ம் தேதி வரை தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டது. செப். 26, 27ம் தேதிகளில் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. அதையடுத்து கட்சித் தலைமை அலுவலகம், புதிய நிர்வாகிகள் பட்டியலை புதன்கிழமை (செப். 28) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சேலம் மத்திய மாவட்டம்:
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக சேலம் வடக்கு எம்.எல்.ஏ. வழக்கறிஞர் ராஜேந்திரன் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார். கல்லூரி மாணவராக கழகத்திற்குள் அடியெடுத்து வைத்த ராஜேந்திரன், பெரிய அளவில் சலசலப்புகளின்றி கட்சியை வழிநடத்திச் செல்லக்கூடியவர் என்று பெயரெடுத்துள்ளார். மத்திய மாவட்ட அவைத்தலைவராக ஜி.கே.சுபாசு, துணைச் செயலாளர்களாக ஜி.குமரவேல், திருநாவுக்கரசு, எஸ்.மஞ்சுளா, பொருளாளராக மு.கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சி.ராஜேந்திரன், கே.டி.மணி, கு.சீ.வெ.தாமரைக்கண்ணன், ஜெ.ஜெயக்குமார் ஆகியோர் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாகவும், நாசர்கான் என்கிற அமான், அ.பூபதி, அ.ராஜேந்திரன், பெ.அசோகன், கன்னங்குறிச்சி குபேந்திரன், ப.குப்புசாமி, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி.,யின் தம்பி எஸ்.ஆர்.அண்ணாமலை, கே.சத்யா ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சேலம் மேற்கு மாவட்டம்:
சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த டி.எம்.செல்வகணபதி, மீண்டும் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். தேர்தல் களப்பணிகளைச் சிறப்பாக செய்யக்கூடியவர் என்பதோடு, கோஷ்டி அரசியல் செய்யாதவர் என்பதாலும் கட்சித் தலைமையின் 'குட்புக்'கில் இடம் பிடித்துள்ளார். அதனால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவராக பி.தங்கமுத்து, துணைச் செயலாளர்களாக அ.த.சம்பத்குமார், க.சுந்தரம், எஸ்.எலிசபத் ராணி, பொருளாளராக பி.பொன்னுசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக பி.ஏ.முருகேசன், மு.ராமநாதன், எஸ்.பூவா ஆகியோரும், பொதுக்குழு உறுப்பினர்களாக க.அன்பழகன், ஆர்.காசிவிஸ்வநாதன், எஸ்.பி.ரவிக்குமரன், மு.சவுந்திரராஜன், என்.பழனியப்பன், எஸ்.தங்கமணி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சேலம் கிழக்கு மாவட்டம்:
சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு இந்தமுறை கடும் போட்டி நிலவியது. பலத்த போட்டிக்கு இடையிலும் கிழக்கு மாவட்ட செயலாளராக மீண்டும் எஸ்.ஆர்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மா.செ. பதவிக்கு குறி வைத்து காய் நகர்த்திய பாரப்பட்டி க.சுரேஷ்குமார், முதன்முதலாக மாவட்ட துணைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கு.சின்னதுரை, எஸ்.கோமதி ஆகியோரும் துணை செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆர்.வி.ஸ்ரீராம், பொருளாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக தும்பல் எ.கணேஷ், சங்கர் என்கிற சாமிநாதன், எம்.மனோகரன், ஜெ.ரேகாபிரியதர்ஷினி ஆகியோரும், பொதுக்குழு உறுப்பினர்களாக ஷேக் மொய்தீன், சோமசுந்தரம், ராஜா, முத்துலிங்கம், சந்திரமோகன், தமிழ்செல்வன், கோபால், டாக்டர் மலர்விழி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.