Skip to main content

பா.ஜ.க.வை ரங்கசாமி புறக்கணிக்கிறார் - நாராயணசாமி குற்றச்சாட்டு

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி,  மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் வெளியிட, வேட்பாளர் வைத்திலிங்கம் பெற்றுக்கொண்டார். 

 

rangasamy refuse bjp said by narayanasamy

 

பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தேர்தலை திசைதிருப்புகிறார். என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தில் விநியோகிக்கப்படும் துண்டு பிரசுரங்களில் பிரதமர் நரேந்திர மோடி படமோ, கூட்டணிக் கட்சித் தலைவர்களின் படங்களோ இல்லை. நரேந்திரமோடி பிரதமராக ஆவதை ரங்கசாமி விரும்பவில்லைபோலும். அவர் பாஜக கூட்டணியில்தான் உள்ளாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்