இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, இராமேஸ்வரம் என நான்கு நகராட்சி உள்ளன. இதை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என திமுக மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான முத்து இராமலிங்கமும், அதேபோல் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமியும் போட்டி போட்டு வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கீழக்கரை நகராட்சியின் தேர்தலில் அரசியல் கட்சியினரும், சுயேட்சைகளும் என 21 வார்டில் 120 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா, முத்துராமலிங்கம் ஆகியோர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மட்டும் பிரச்சாரம் செய்தார். அதிமுக சார்பில் பெரிய தலைவர்கள் வேறுயாரும் பிரச்சாரம் செய்ய வரவில்லை. இதனால் அதிமுக சற்று பின்நோக்கியே உள்ளது. மேலும் எஸ்.டி.பி.ஐ, நாம் தமிழர் கட்சி, கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு, சுயேட்சைகள் என களம் காண்பதால் சூரியனுக்கும் இவர்களுக்கும் கடும் போட்டி நிலவிவருகிறது.
குறிப்பாக 3வது வார்டில் போட்டியிடும் சேர்மன் வேட்பாளரும், வழக்கறிஞர் ஹமீது சுல்தான் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்த வார்டில் போட்டி கடுமையாக இருக்கும் என்கின்றனர் அப்பகுதி வாக்காளர்கள்.