
இந்திய அரசியலில் அடுத்த பிரதமர் யார் என்கிற தேர்தல் பரபரப்பு பிரச்சாரத்தில் அரசியல்வாதிகள் முழு மூச்சாக இறங்கி கொண்டிருந்த நிலையில் மக்கள் வாக்களித்துக்கொண்டிருக்கும் நிலையில் திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தேர்தல் விழிப்புணர்வு கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் ஏற்கனவே தன்னம்பிக்கை நூல்கள் எழுதியுள்ளார்.
வாக்களிப்பீர்!
சட்டமியற்றும் சான்றோரைத் தேர்ந்தெடுக்க
சந்தர்ப்பம் தருவது நம் வாக்கு!
உயர்ந்தவர் தாழ்ந்தவர் பாகுபாடின்றி
உரிமையைத் தருவது நம் வாக்கு!
சாதிமத இன மொழிப் பேதமின்றி சமத்துவம் தருவதும் வாக்கு!
தாய்நாட்டுப் பற்றுதனைப் பறைசாற்ற தாயகம் தருவது நம் வாக்கு!
வருங்கால எதிர்பார்ப்பை மெய்ப்படுத்த வாய்ப்புத் தருவது நம் வாக்கு!
புதுமைகள் நம்நாட்டில் நாம் படைக்க படைபலம் தருவது நம் வாக்கு!
பொறுமையாய் சிந்தித்து ஓட்டளிக்க
பொறுப்பினைத் தருவது நம் வாக்கு!
மறவாது சாவடிக்குச் சென்றிடுவோம்!
மைபதித்து வாக்கினைப் பதித்திடுவோம்!