தினகரன் கட்சி கானல் நீர் ஆகும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நடைபெற உள்ள பன்னாட்டு ஜவுளி கண்காட்சியில் 600 அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது- வெளிநாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட நுகர்வோர் கொள்முதல் நோக்கத்தில் வருவார்கள். அவர்களது ஆர்டர் எதிர்பார்க்க முடியாது. அது ஒரு வரவேற்புக்குரிய நிகழ்வாக இருக்கும். டெக்ஸ்டைல் பாலிசி மிக விரைவில் வெளியாகும். கழிவு பஞ்சு என்பது பை புராடக்டுக்கான ஒரு பொருள் அதன் மீதான வரிக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளதற்கு அவர்கள் மாற்று தொழிலுக்கு சென்றதும் இயலாமையுமே காரணம். அதனால் தொழில் நலிந்து விட்டது என கூற முடியாது. கைத்தறி என்பது நமது கலாச்சாரத்தின் அடையாளம். அதை காப்பாற்றுவதற்காக மாநில அரசு சார்பில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கைத்தறி விசைத்தறியாளர்கள் வர்த்தகம் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடியாக உள்ளது. ஜவுளிதுறையை பொருத்தவரை தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. 1136 கூட்டுறவு நெசவாளர் சங்கம் மூலமாக தொழில் நடத்தப்படுகிறது. மற்ற மாநிலங்களில் தனியாரால் நடத்தப்படுகிறது.
டிடிவி மேல் முறையீட்டிற்கு செல்வேன் என்றால் தான் கட்சியில் ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள் என்பதால் மேல்முறையீட்டிற்கு செல்வேன் என அவர் கூறியிருக்கிறார். தங்கதமிழ்செல்வன் ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பில் இருந்தார். மீண்டும் நீதிபதியை விமர்சித்திருப்பது அநாகரீகமானது. தினகரன் கட்சி விரைவில் கானல் நீராகி காணாமல் போகும் என்றார்.