மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திண்டுக்கல்லில் உள்ள கட்சிஅலுவலகத்திற்கு வருகை தந்து பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின் பத்திரிகையாளரிடம் பேசிய மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்..மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் 72 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மத்திய அரசு மனிதாபிமானமற்ற முறையில் விவசாயிகளை நடத்தியத்தோடு மட்டுமில்லாமல் சட்டத்தின் மூலம் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்தது, தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை தீர்வாகாது. கோர்ட் அமைத்துள்ள நான்கு பேர் கொண்ட குழுவில் வேளாண்மை சட்டங்களை ஆதரித்து பேசியவர்களே இடம்பெற்றுள்ளன.
போராட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை இதில் கோர்ட்டு தலையிடுவது சரியான அணுகுமுறை கிடையாது தற்போது பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்துள்ளது மூலம் அரசுக்கு இரண்டு மாத தவணை கொடுத்தது போல் அமைந்துவிட்டது. தற்போது காலங்கடந்து பெய்து வரும் மழையினால் டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
தமிழக அரசு சேதமடைந்த பயிர்களைக் கணக்கிட்டு ஒரு ஏக்கருக்கு 3,000 வழங்க வேண்டும். இதேபோல் மற்ற பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் இல்லையெனில் பொங்கலுக்கு பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரிய போராட்டம் நடத்தும் பதவிக்காலம் முடிந்து பிரிவுசார விழா நடத்த வேண்டிய சமயத்தில் துணைவேந்தருக்கு பதவி நீடிப்பு வழங்கியுள்ளது உள்நோக்கத்தோடு ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை ஏற்கனவே மூழ்கும் கப்பல் நிலையில்தான் உள்ளது தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக 2500 ரூபாய் மற்றும் இலவச டேட்டா கார்டு உள்ளிட்ட திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். இது இவர்களது வெற்றிக்கு ஒரு போதும் உதவாது. அதிமுக கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது, ஆனால் திமுக கூட்டணியில் எந்த ஒரு குழப்பமும் இல்லை வருகிற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கூறினார்.
பத்திரிக்கையாளரின் சந்திப்பின் போது மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம். மாநில குழு உறுப்பினர் தோழர் பாலபாரதி. பாண்டி உள்பட பல கட்சி தோழமைகள் உடன் கலந்து கொண்டனர்.