Skip to main content

“பாஜக ஆட்சிக் காலத்தில்தான் தமிழக மீனவர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது” - முதல்வர் ஸ்டாலின்

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

oppression TN fishermen has increased only during the BJP regime say Cm Stalin

 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், தென் மாவட்ட திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றினர். 

 

இந்த நிலையில் இன்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நடைபெற்று வரும் மீனவர் நல மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். இதில் அவர்களுடன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

 

இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டை உலகத்தோடு இணைத்தது கடல்; வகை வகையாக கடலில் கலம் செலுத்தியவர்கள் தமிழர்கள்; கடல் ஆழமானது மட்டுமல்ல, வளமானது; கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்; தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் மீனவர் குடும்ப மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 5-ல் இருந்து 20 விழுக்காடாக உயர்த்தியுள்ளோம்; கடல் அரிப்பை தடுக்க, படகுகளை பாதுகாக்க தூண்டில் வளைவுகளை அமைத்துக் கொடுத்துள்ளோம்; மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 5,035 பேருக்கு வீடுகளுக்கான பட்டா வழங்கப்படும்; மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,000-லிருந்து ரூ.8,000ஆக உயர்த்தி வழங்கப்படும்; விசைப்படகுகளுக்கு 19,000 லிட்டர் மானிய டீசல், நாட்டுப்படகுகளுக்கு 4,400 லிட்டர் மானிய டீசல் வழங்கப்படும்; 45,000 மீனவர்களுக்கு கூட்டுறவு கடன் வழங்கப்படும்; சாத்தியமான இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும்; மீனவ பெண்கள் கடல் பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருவாயை பெருக்க கடல் பாசி பூங்கா அமைக்கப்படும்; தங்கச்சிமடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.

 

தமிழ்நாடு மீனவர்களை இலங்கை படை தொடர்ந்து தாக்குவதை மீனவர்கள் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது; 2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அடக்குமுறை இன்னும் அதிகமாகியுள்ளது; பா.ஜ.க. ஆட்சியின் போது மீனவர்கள் மீது 48 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது; பிரதமர் மோடியின் ஆட்சி பலவீனமாக இருப்பதால், மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல் தொடர்கிறது”என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்