தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே இருக்கும் போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகமலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் அகமலை, ஊரடி, ஊத்துகாடு, கண்ணக்கரை, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது.
தற்பொழுது பரவிவரும் கரோனா தொற்று மூலம் மலை கிராம மக்கள் அதிக அளவில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் ஊரடங்கு உத்தரவால் அவர்கள் இருக்கும் பகுதிக்கு அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் கிடைக்காமல் அந்த மலை கிராம மக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வந்தனர்.
இந்த விஷயம் தேனி பாரளுமன்ற உறுப்பினர் ஒ.பி.ரவீந்தரநாத்குமார் காதுக்கு எட்டியது. உடனே தனது சொந்த செலவில் அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராம மக்கள் 462 குடும்பங்களுக்கு 1200 ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகை பொருட்கள், மருந்து, குழந்தைகளுக்கான டானிக் மற்றும் காய்கறிகளை ரூபாய் ஐந்து லட்சத்திற்கு வாங்கிய எம்பி ரவீந்திரநாத்குமாரோ அதை தனித் தனியாக பேக் பண்ண செல்லி, அந்தப் பொருட்களை எல்லாம் அந்த மலை கிராமங்களுக்கு கொண்டு சென்று நேரில் வழங்கியதை கண்டு மலைக் கிராம மக்களும் பூரித்துப் போய் விட்டனர்.
இந்த நிகழ்சியில் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கொண்டு எம்.பி. ரவீந்தரநாத் குமாரிடம் பொருட்களை வாங்கிச் சென்றனர்.