Skip to main content

பா.ஜ.க.வில் இணையப்போகும் தி.மு.க.வின் முக்கிய நபர்? அதிருப்தியில் தி.மு.க.!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

dmk


தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார் தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி. இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, இதற்கு முன்பு வகித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் பதவியை துரைசாமிக்கு வாங்கித் தருவதாக உறுதியளித்த முருகன், அது தொடர்பாக பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டாவிடம் பேசியிருப்பதாகச் சொல்கின்றனர். 
 


இந்த நிலையில், துரைசாமியைத் தொடர்ந்து இன்னும் சில முக்கியத் தலைகள் கமலாலயம் நோக்கி வருவார்கள் என பா.ஜ.க. தரப்பில் கூறிவருகின்றனர். இதுபற்றி விசாரித்தபோது, கடந்த சில மாதங்களுக்கு முன் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம் பா.ஜ.க.வில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. பா.ஜ.க.வில் இணைவதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனிடம், கே.பி.ராமலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வில் இருக்கும் அதிருப்தியாளர்களைத் தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க. தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.  பா.ஜ.க.வின் இந்தச் செயலால் தி.மு.க.வினர் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்