Skip to main content

பால் வாங்க போனா அடிக்கிறீங்க... போலீஸ் ஆக்ஷன் குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை!

Published on 27/03/2020 | Edited on 27/03/2020

கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ளது இந்த வைரஸ். அந்தவகையில் உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ள சூழலில், ந்தியாவில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 லிருந்து 17 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் 694 லிருந்து 724 ஆக உயர்ந்துள்ளது. இதில் இந்தியர்கள் 677 பேர், வெளிநாட்டினர் 47 பேர் என மொத்தம் 724 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 137, மகாராஷ்டிராவில் 130, கர்நாடகாவில் 55 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

seeman



மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 43 லிருந்து 67 ஆக அதிகரித்துள்ளது.. மேலும் கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க போலீசார் முக கவசம் அணிந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதோடு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டும் வெளியே வரலாம் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில், மக்கள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதால் மக்களை அப்புறப்படுத்த போலீஸார் தடியடி நடத்துவது உள்ளிட்ட நூதன தண்டனைகளையும் வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு எங்கெங்கு கடைகள் உள்ளன என்பது குறித்த சரியான விவரங்களை தெரிவிக்காததால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க அலைமோதும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் போலீஸார் மக்களுக்கு அன்பாக எடுத்துக் கூறி அவர்களை வீடுகளில் இருக்க அறிவுறுத்தியுள்ள நிலையில், சில இடங்களில் போலீஸார் மக்களை அடித்து துன்புறுத்திய சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அத்தியாவசிய பொருட்கள் சரியாக மக்களுக்கு கிடைக்க அரசு வகை செய்வதுடன், காவல்துறை மக்களிடம் மனிதாபிமானத்துடன் கூடிய கட்டுக்கோப்பை கடைப்பிடிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்