
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட மல்லிகார்ஜூன கார்கே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மல்லிகார்ஜூன கார்கே சோனியாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் சசி தரூரை எதிர்த்து, சோனியா குடும்பத்தின் தீவிர விசுவாசியான மல்லிகார்ஜூன கார்கே களமிறக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கு முன் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை அடிப்படையில் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார். அதற்கான கடிதத்தை சோனியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து புதிய ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இதனை தொடர்ந்து ராஜ்யசபா காங்கிரசின் புதிய தலைவராக ப.சிதம்பரம் முயற்சித்து வருகிறார்.