Published on 19/04/2022 | Edited on 19/04/2022
தொழிற்துறையில் தமிழகம் வேகமாக முன்னேறி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
2022-23ஆம் ஆண்டிற்கான தொழில் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், "புதிய முதலீடுகளைப் பெற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டு வந்துள்ளன. ஆட்சிக்கு வந்து 10 மாதங்களில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 69,375 கோடியே 54 லட்ச ரூபாய் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். புதிய தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழிற்வளர்ச்சியின் பலன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் செல்லாமல் தமிழகம் முழுமைக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அரசு தன்னுடைய பணியைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது" எனத் தெரிவித்தார்.