Skip to main content

எம்.ஜி.ஆரின் கனவைத் தகர்க்கும் அமைச்சர்கள்! -கோபத்தில் அதிமுகவினர்...

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

Tiruchirappalli

 

இரண்டாவது தலைநகர் மதுரை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியை முன்னிறுத்தும் திட்டங்கள் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே தொடர்கின்றன.

 

திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர்: இனிமேல் கட்டப்படவுள்ள அரசுத் துறை கட்டிடங்கள் அனைத்தும் திருச்சியில் கட்டவேண்டும். தண்ணீர் வசதி, விமான வசதி, ரயில்வே வசதி, இட வசதி என அனைத்தும் திருச்சியில் தாராளமாக உள்ளது. அரசியலை கடந்து பூகோள அமைப்பின் அடிப்படையிலும் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சியை தேர்வு செய்து முதலமைச்சர் பணிகளை தொடங்கினால் மக்கள் வரவேற்பார்கள்.

 

அரசியல் விமர்சகரும் கறுப்புக் குதிரை நூலாசிரியருமான நரேன் ராஜகோபாலன்: திருச்சி நிர்வாக தலைநகரமாகவும், சென்னை தமிழ்நாட்டின் வணிக தலைநகரமாகவும் இருக்கட்டும். திருச்சியிலிருந்து தமிழ்நாட்டின் எந்த மூலைக்கும் ஆறு மணி நேரத்தில் போய்விட முடியும். ஆனால் இன்றைக்கு மதுரையிலிருந்து சென்னைக்கு வருவதற்கே 8 மணி நேரமாகும். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியெல்லாம் கேட்கவே வேண்டியதில்லை. துறைமுகங்களுக்கு பக்கத்தில் தலைநகரங்கள் என்பது பிரிட்டிஷ் அரசு அவர்கள் வசதிக்குச் சொன்னது. அதனால்தான் மெட்ராஸ், பம்பாய், கொல்கத்தா முக்கிய நகரங்களாக இருந்தது. 21 ஆம் நூற்றாண்டில் கடல்வழி வணிகத்தைவிட, இழை வழி வணிகம்தான் அதிகம். அதனால் துறைமுகங்கள் இருக்க வேண்டிய கட்டாயமில்லை.

 

தி.மு.க. முதன்மைச் செயலாளர் நேரு: திருச்சியை இரண்டாவது தலை நகராக்கும் கோரிக்கையை இவர் ஆதரிக்கிறார். வணிகர்கள் மற்றும் பொதுமக்களைக் கூட்டி விரைவில் ஆலோசனை நடத்தவிருப்பதாக, கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தெரிவித்துள்ளார். 'தலைநகர் திருச்சி’ என்ற இயக்கத்தை நடத்திவரும் ஜவகர் ஆறுமுகம் தொடர்ந்து இதனை வலியுறுத்துகிறார்.

 

முன்னாள் எம்.பியும் அ.தி.மு.க மாவட்ட செயலாளருமான குமார்: "திருச்சியை இரண்டாவது தலைநகராக்க விரும்பிய எம்.ஜி.ஆர். இதற்காக நவல்பட்டு கிராமத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் அண்ணா நகர் பகுதியை துணை நகரம் என்ற பெயரில் உருவாக்கினார். கிராமத்தில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டது. 1984ஆம் ஆண்டிலேயே ஐந்தாயிரம் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டமான துணை நகரம் திட்டம் திருச்சி மக்களின் இந்த முதல்வர் மற்றும் துணைமுதல்வரிடம் கோரிக்கையை வைப்போம்'' என்றார்.

 

வெல்லமண்டி நடராஜன்- சுற்றுலாத் துறை அமைச்சர்: "திருச்சியை இரண்டாவது தலைநகராக ஆக்க வேண்டும் என விரும்பிய எம்.ஜி.ஆர் உடல்நலக் குறைவால் மறைந்துவிட்டதால், நிறைவேறாமல் போய்விட்டது. திருச்சியைத்தான் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்'' என்றார் உறுதியாக.

 

தலைநகர் திருச்சி எனும் எம்.ஜி.ஆரின் கனவை அமைச்சர்களே தகர்ப்பது அ.தி.மு.க.வினரை கோபப்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்