Published on 18/04/2019 | Edited on 18/04/2019
ஈரோடு மாவட்டம் சிவகிரி சேர்ந்தவர் முருகேசன் இன்று காலை தனது ஜனநாயக கடமையான வாக்கினை அளிக்க சிவகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றார்.
![man dies of heart attack while coming to booth](http://image.nakkheeran.in/cdn/farfuture/FXhFFm9DRxnjcregMqjnl1D04jJsdIVQjFuZA3bxnf4/1555570335/sites/default/files/inline-images/fdgdfgdfgdfg.jpg)
அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றார் முருகேசன். ஆனால் திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே சரிந்தார் அங்கிருந்த மக்கள் முருகேசனை அமர வைத்து தண்ணீர் தெளித்தனர். அப்போதும் அவர் மயக்கம் தெளியவில்லை, எனவே அருகே இருந்த மருத்துவர்களை அழைத்து வந்து முருகேசனுக்கு முதலுதவி செய்தனர். அப்போது தான் வாக்களிக்க வந்த முருகேசன் மாரடைப்பால் இறந்தது தெரிந்தது. பெரியவர் முருகேசன் இறந்து போன அந்த சம்பவம் சிவகிரி வாக்குப் பதிவு மையத்தில் பரபரப்பும் பரிதாபத்தையும் மக்களிடம் ஏற்படுத்தியது.