Published on 21/03/2021 | Edited on 21/03/2021

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்டம் புளியங்குளம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய கமல்ஹாசன், "இலவசம் தருவதால் ஏழ்மை நீங்காது; பேருந்தை உடைப்பதும், எரிப்பதும் போராட்டம் அல்ல, கிரிமினல் பணி. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஊழியர்கள் பங்குதாரர்களாக ஆக்கப்படுவர். நான் செல்லும் இடங்களில் எல்லாம் ஜெயிச்சாச்சு, ஜெயிச்சாச்சு என புதிதாக ஒரு குரல் கேட்கிறது. தி.மு.க. உருவானது காலத்தின் கட்டாயம், தற்போது அதை அகற்றுவதும் காலத்தின் கட்டாயமே" என்றார்.