Published on 30/05/2022 | Edited on 30/05/2022
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், அந்த மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. ஜூன் 3ஆம் தேதி கலைஞரின் 99ஆவது பிறந்த நாள் விழாவைச் சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் திமுக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது எனவும், திமுக ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் சட்டமன்ற உறுப்பினரும் மாநில இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமெனவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், என்.கோவிந்தராஜன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.