Published on 05/02/2019 | Edited on 05/02/2019

எதிர்பார்க்கும் தொகுதி கிடைத்தால் பாஜகவுன் தோழமை தொடரும் என்று இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.
திருச்சியில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாரிவேந்தர், பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் எந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து நிர்வாகிகளுடன் கருத்து கேட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், நாங்கள் எதிர்பார்க்கிற தொகுதி, எதிர்பார்க்கிற எண்ணிக்கை கிடைத்தால் பாஜகவுடன் தோழமை தொடரும் என்றார்.