Published on 09/02/2019 | Edited on 09/02/2019

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கமல்ஹாசன் மதசார்பற்ற கருத்துடையவர். அவருடைய கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றாக உள்ளது. எனவே அவர் தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் எங்களுடன் வந்தால் பா.ஜனதா, அ.தி.மு.க.வுக்கு எதிரான ஓட்டுகள் சிதராமல் கிடைக்கும்.கமல் வந்தால் எங்கள் கூட்டணி இன்னும் பலமாகும். எனவே அவர் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன் என்றார்.