அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் இன்று கடைசி நாள் பிரச்சாரத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கும் இடங்கள் என்று 12 இடங்களை எழுதி கொடுத்திருந்தார் வேட்பாளர் செந்தில் பாலாஜி. அதில் நான்கு இடங்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்தார்கள். பிறகு தர்ணாவிற்கு பிறகு 8 இடங்கள் கொடுத்தார்கள். பிறகு கொஞ்ச நேரம் கழித்து செந்தில்பாலாஜி எழுதி கொடுத்த அத்தனை இடங்களையும் மாற்றிவிட்டு புதிய வழி தடங்கள் கொடுத்த இந்த நேரங்களில் பிரச்சாரம் செய்யுங்கள் என்று கரூர் மாவட்ட எஸ்.பி. விக்ரம் அனுமதி கொடுத்தார்.
எங்கள் தலைவர் பிரச்சாரம் செய்வதற்கு நீங்கள் நேரம் கொடுக்க வேண்டாம். திட்டமிட்டு பிரச்சாரம் பண்ண கூடாது என்றும் மக்களை சந்திக்க கூடாது என்றும் நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள். நீங்கள் கொடுத்த அத்தனை இடங்களையும் மறுக்கிறேன் என்று சொல்லி செந்தில்பாலாஜி ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று காலை அரவக்குறிச்சியில் புங்கம்பாடி ஊராட்சியில் தடாகோவில் முன்பு பிரச்சாரத்தை ஆரம்பித்தார். பிரச்சாரத்திற்கு பொதுமக்களும் கட்சியினரும் ஏகப்பட்ட அளவில் திரண்டனர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் போதும்போது,
இந்த தேர்தல் முடிவுகள் மோடி ஆட்சியை குளோஸ்பண்ணும். இங்கே எடப்பாடி ஆட்சிக்கு முடிவு வரும். அதனால் இந்த ஆட்சி கவிழ கூடிய நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடியோ எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் என் ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார் என்று சொல்லி வருகிறார். கவிழ்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. காரணம் இப்போது ஏற்கனவே 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் முடிந்து விட்டது. தற்போது 4 தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. இந்த 22 இடைத்தேர்தலில் திமுக உறுதியாக வெற்றிப்பெற போகிறது. இந்த 22 தொகுதிகளில் வெற்றிபெற்றவுடன் காங்கிரஸ் மற்றும் இந்தியன் முஸ்லீம் கட்சிகள் இணைந்து ஏறக்குறை 119 எம்.எல்.ஏ.க்கள் கிடைப்பார்கள். அதன் மூலம் திமுக மெஜாரட்டியான ஆட்சி 23ம் தேதிக்கு பிறகு அமையும் என்று செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.