Skip to main content

குமரி இடைத்தேர்தல்- மார்ச் 1 முதல் காங்கிரஸில் விருப்ப மனு!

Published on 28/02/2021 | Edited on 28/02/2021

 

kanyakumari district, lok sabha by election congress party

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெறவுள்ள 2021 கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து வருகிற மார்ச் 1 முதல் 5- ஆம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளது.

 

விருப்ப மனுக்களை அளிக்க விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் ரூபாய் 500 கட்டணம் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மார்ச் 5- ஆம் தேதிக்குள் ரூபாய் 25,000 கட்சி நன்கொடையாக வரைவோலை மூலம் (Demand Draft) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

 

விருப்ப மனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முறையாகப் பூர்த்தி செய்தும், இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்ப மனுவுடன் சேர்த்து இணைத்து நன்கொடை தொகையை 'TAMILNADU CONGRESS COMMITTEE' என்ற பெயரில் வரைவோலையாக (Demand Draft,  Payable at Chennai ) சென்னை, சத்தியமூர்த்தி பவனில் மார்ச் 1 முதல் 5- ஆம் தேதிக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

 

விருப்ப மனு அளிக்கும் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card), ஆதார் அட்டை (Aadhar Card)  மற்றும் பான் கார்டு (Pan Card) நகலை கட்டாயம் இணைக்க வேண்டும்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'பேராசை தான் காரணம்'-விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் குற்றச்சாட்டு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
'Greed is the reason'- Congress candidate interview with Vilavanko

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

மக்களவை தேர்தலோடு கன்னியாகுமரியில் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. அதற்கான பரப்புரைகளிலும் அரசியல் கட்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டைக் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,''முன்பு விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி இருந்தார். அவர் செய்ய வேண்டிய கடமைகளை உண்மையாக தெளிவாக செய்திருக்கிறார். ஏனென்றால் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற வரைக்கும் மிக தெளிவாகத்தான் மக்களுக்கான பணியை செய்தார். இன்றைக்கு அவர் பேராசை காரணமாக காங்கிரசை விட்டு பாஜகவிற்கு சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். அதில் மக்கள் மத்தியில் என்ற மாற்றுக் கருத்தும் கிடையாது. பாஜக செய்யும் பொய்ப் பிரச்சாரம் எடுபடப் போவதில்லை. அதை நீங்கள் ஜூன் நான்காம் தேதி பார்க்கத்தான் போகிறீர்கள்'' என்றார்.