



Published on 07/08/2019 | Edited on 07/08/2019
முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. திமுக சார்பில் சென்னை வாலாஜா சாலையில் இருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடந்தது. இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்பிக்கள், திமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.