![kukkar](http://image.nakkheeran.in/cdn/farfuture/p0Tt8d7S2gVO0oBVABnKurpOQEqeeFIXx16s2eMHD8E/1533347658/sites/default/files/inline-images/kukkar.jpg)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு நல உதவி வழங்கும் விழா இன்று மாலையில் ஆர்.கே.நகரில் விமரிசையாக நடத்திக்கொண்டிருக்கிறது ஆளும் கட்சி. ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளர் அமைச்சர் உதயக்குமாரின் நேரடி ஏற்பாட்டில் விழா நடக்கிறது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் மதுசூதனின் ஆதரவாளர்கள் செய்திருக்கிறார்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் கலந்து கொண்டுள்ள இவ்விழாவில், ஜெயலலிதாவின் புகழ் பாடுவதோடு தொகுதி மக்களுக்கு மிக்சி, கிரண்டர், ஃபேன் உள்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய நல உதவிகள் வழங்குகின்றனர். தினகரனுக்கு செக் வைக்குமளவுக்கு கூட்டத்தைக்கூட்டியுள்ளனர்.
இந்த விழாவில் கலந்துகொள்ள மாவட்ட அமைச்சர் ஜெயக்குமாருக்கு அழைப்பில்லை. அழைக்கக்கூடாது என மதுசூதனன் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார். அதனால் அமைச்சருக்கு கடைசிவரை அழைப்பில்லை. அழையா விருந்தாளியாக அமைச்சர் கலந்துகொள்வாரா? என்கிற சந்தேகம் அவரது ஆதரவாளர்களிடையே அலையடிக்கிறது. இது ஒரு புறமிருக்க, தொகுதி மக்களுக்கு வழங்கும் பொருட்களில் குக்கர் ( தினகரனின் சின்னம்) மட்டும் இருக்கக்கூடாது என எடப்பாடியும் ஓபிஎஸ்சும் விழா ஏற்பாட்டாளர்களிடம் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள். இதனால், நல உதவி பொருட்களில் குக்கருக்கு தடை விழுந்துள்ளது என்கிறார்கள் வடசென்னை ரத்தத்தின் ரத்தங்கள்.
- இரா. இளையசெல்வன்