Skip to main content

ஏமாற்றி சீட் வாங்கிய ஹெச்.ராஜா!கோபத்தில் பாஜக தலைமை!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

தமிழகத்தில் தனக்குக் கிடைத்த மரண அடியை மறக்க முடியாத பா.ஜ.க. தலைமை, இந்தத் தோல்விக்கான காரணங்களை எல்லாம் ஆராய ஒரு குழு அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.அதனால் இங்க இருக்கும் பா.ஜ.க.வினர் தான் கட்சியின் படுதோல்விக்கான காரணங்கள் என்றும், அதற்குக் காரணமானவர்களைப் பற்றி  டெல்லித் தலைமைக்கு புகார் கடிதங்களை எழுதறாங்களாம். 
 

bjp



அதில், தமிழக பா.ஜ.க.வை புனரமைக்க வேண்டும்னும், தமிழ்நாட்டில் வாக்குவங்கி பலமாக உள்ள சமூகத்தினரான வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் கட்சியில் பிரதிநிதித்துவம் கொடுக்கணும்னும் சொல்லியிருக்காங்களாம். அதேபோல், கட்சியின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜாவை, அந்தப் பதவியில் இருந்து நீக்கனும்ங்கிற கோரிக்கையும் போயிருக்கு. காரணம், சிவகங்கையில் தனக்கு அதிக செல்வாக்கு இருக்குன்னு சொல்லி, கட்சியை ஏமாற்றிவிட்டார் ராஜா. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி, தமிழகம் முழுக்க கிட்டதட்ட 30 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், இவர் நின்ன சிவகங்கையில் 21 சத வாக்குகளை மட்டும்தான் வாங்க முடிஞ்சிது. அதனால் பொய் சொல்லி சீட் வாங்கிய அவருக்கு எதுக்கு தேசிய செயலாளர் பதவின்னு ராஜாவுக்கு எதிரான காட்டத்தையும் காட்டியிருக்காங்களாம்.இதனால் ராஜாவின் கட்சி பதவி பறிக்கப்படும் என்றும்,தமிழக பாஜகவில் பல மாற்றங்கள் வரும் என்றும் கூறுகின்றனர்.

சார்ந்த செய்திகள்