



Published on 03/02/2021 | Edited on 03/02/2021
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில், அக்கட்சியின் அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி தலைமையில், உயர்நிலைக்குழுக் கூட்டம் இன்று (03.02.2021) காலை 9.00 மணிக்கும், அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய வைகோ கூறியாதாவது, “எம்.எல்.ஏ, எம்.பி.யாக வேண்டும் என்ற ஆசை எல்லாம் விட்டுவிடுங்கள். ஊரில் இருந்து கொடியேற்றக் கூடிய தொண்டர்கள் பதவியை எதிர்பார்க்கிறார்களா?” எனப் பேசினார்.