அ.தி.மு.க. ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு தற்போது வரை இழுபறியாகவே உள்ளதாக சொல்லப்படுகிறது. 26-ந் தேதி நடக்க இருக்கும் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 13-ந் தேதி தொடங்குகிறது. அ.தி.மு.க.வில் 3 ராஜ்யசபா சீட்டுக்கு மாஜி மந்திரிகள், மாஜி எம்.பி.க்கள்., மா.செ.க்கள் என்று 30 பேருக்கு மேல் கடுமையாக போட்டி போடுவதால் இவர்களில் யார் யாரை ராஜ்ய சபாவுக்கு நிறுத்தலாம் என்று எடப்பாடி திகைத்து போயுள்ளதாக சொல்கின்றனர். இதில் அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்., எடப்பாடிக்கு அடுத்த நிலையில் கட்சிப் பொறுப்பில் இருப்பவர் தன் சைடிலிருந்து நிர்பந்தம் கொடுப்பதாக சொல்கின்றனர். அதேபோல் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாஜி மந்திரி ஒருத்தரும் பெரிய தொகையைக் கொடுத்து, ராஜ்யசபா பதவிக்கு போட்டி போடுவதாக கூறுகின்றனர்.
மேலும் டெல்லியை நாம் சமாளிக்க வேண்டும் என்றால் என்ன மாதிரி சீனியர்களுக்கு ராஜ்யசபா கொடுத்தால் தான் சரியாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர். அதனால் பேசாமல் புதுமுகங்களையே செலக்ட் பண்ணிடலாம் என்று எடப்பாடி நினைப்பதாக சொல்கின்றனர். இதற்கிடையே த.மா.கா.வாசனுக்கு ஒரு சீட் என்று டெல்லியில் இருந்து பிரஷர் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. 8-ந் தேதி சிறப்பான மாசி மகம் வருவதால் அன்றைய தினம் லிஸ்ட்டை வெளியிடலாம் என்று சிலர் கூறிவரும் நிலையில், எந்த முடிவையும் எடுக்கமுடியாமல் குழப்பத்தில் எடப்பாடி இருப்பதாக சொல்கிறார்கள்.