தமிழக முதல்வர் எடப்பாடியின் வெளிநாட்டு டூருக்கான நாள் நெருங்கிக்கிட்டு இருக்கு. ஆனாலும், அவர் கவனிக்கும் துறைகளை யாருக்கும் கொடுக்கிறதா இல்லை என்ற முடிவில் இருக்கும் எடப்பாடி. 28-ந் தேதி வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளப் போறார் எடப்பாடி. அவர் தன்னிடம் இருக்கும் துறைகளைத் தங்களிடம் ஒப்படைச்சிட்டுப் போவார்ன்னு துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் தங்கமணி, வேலுமணி ஆகிய அமைச்சர்கள் எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க. முன்னே இருந்த முதல்வர்கள் அப்படி ஒப்படைச்சிருக்காங்க.
தமிழக முதல்வரா இருந்த அறிஞர் அண்ணா, முதன்முதலா அமெரிக்காவுக்கு அரசியல் ரீதியா சுற்றுப்பயணம் மேற்கொண்டப்ப கலைஞர், நாவலர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் தன் இலாகாக்களை ஒப்படைச்சிட்டுப் போனார். அடுத்து சிகிச்சைக்காக அவர் இரண்டாம் முறையாக அமெரிக்கா போன போதும் பழைய மாதிரியே நாவலர் உள்ளிட்டவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கலைஞரும் அரசுரீதியான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது நாவலர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் பொறுப்புகளைப் பகிர்ந்துக்கிட்டாரு. இதே போல் எம்.ஜி.ஆர். அரசு ரீதியா அமெரிக்கப் பயணம் போனப்ப, அமைச்சரவையில் அவருக்கடுத்து இருந்த நாஞ்சில் மனோகரனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
அப்புறம், நினைவிழந்த நிலை யில், அமெரிக்காவில் சிகிச் சைக்காக போனபோதும், இரண்டாவது முறை சிகிச் சைக்குப் போனபோதும் நாவலர் உள்ளிட்டவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அதேபோல் எடப் பாடியும் தன் துறைகளை ஒப்படைப்பார்ன்னு அவங்க எதிர்பார்த்தாங்க. ஆனா, தன் வசமுள்ள பொறுப்புகளை யாரிடமும் பகிர்ந்துக்கலைன்னு எடப்பாடி உறுதியா இருக்காரு. மேலிடத்துக்கும் இதை தெரிவிச் சிட்டாருனு அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.