Skip to main content

’ஒரு செருப்பு வேண்டாம்!  விழுந்தால் எனக்கு இரண்டு செருப்பு விழ வேண்டும்!!’ - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
EV

 

ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதில் ஊழல் நடைப்பெற்றுள்ளது என குற்றம்சாட்டியும் இதற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் முகுல் வாஷ்னிக், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் இளங்கோவன் , மகளிர் அணி ஜான்சிராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில்,  ‘’மத்திய பா.ஜ.க அரசு இந்தியாவை அந்நிய நாட்டுக்கு அடகு வைத்து விடுவார்கள். அதே போல தனியார் தொழில்அதிபர்களுக்கும் விற்றுவிட்டார்கள். சர்வாதிகார ஆட்சி இந்தியாவில் நடக்கிறது. அரசியல் என்று வந்தால் மாலை மட்டும் விழாது. செருப்புகளும் வந்து விழும். 10 மாலைகள் வந்து விழுந்தால் ஒரு செருப்பாவது விழும். ஒரு செருப்பு வேண்டாம்  விழுந்தால் எனக்கு இரண்டு செருப்பு விழ வேண்டும் என்று நினைப்பேன்.

 

 2014-ம் ஆண்டு ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இந்தப் போர் விமானம் ஒன்றுக்கு தலா 526 கோடி என மொத்தம் 126 ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு வந்த பி.ஜே.பி அரசு ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு தலா 1,060 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் 41,000 கோடி ஊழல் செய்துள்ளது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு. இந்த ஊழல் மத்திய அரசை வீட்டுக்கு அனுப்பும். வேண்டும். பாசிச ஆட்சி என்று சொன்னால்.. சிறை என்றால்... நான் தனியாக இல்ல எல்லோரும் சேர்ந்து சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறோம்.  இந்த மத்திய அரசை விரட்ட வேண்டும்’’ என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓபிஎஸ் மகன் - ஈவிகேஎஸ் இழுபறி

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

 

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேனி தொகுதி்யில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் குமாரும், திமுக கூட்டணி்யில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனும் மாறி மாறி முன்னிலையில்  வந்து இழுபறியில் உள்ளனர்.

 

e

 

Next Story

’30 சதவீதம் கமிஷன் கேட்டார்!’-ஓபிஎஸ் மீது ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு!!

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

 


தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்டச் செயலாளர் சாகுல் ஹமீது, காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர். 

 

ev

 

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வேட்புமனுவை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பெற்றுக்கொண்டார். 

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,  ’’தேனி மாவட்டத்தில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதை 20 வருடங்களாக பிராட் கேஜ் பாதையாக மாற்றப்படாமலே உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கியும், பல காண்ட்ராக்டர்களிடம் இந்தப்பணிகள் ஒப்படைக்கப்பட்டும் இன்னும் பணிகள் நிறைவேறாமல் இருக்கக் காரணம், தேனியைச் சேர்ந்த அமைச்சர் தான். எனக்குத் தெரிந்த ஆந்திரா காண்ட்ராக்டர் கூறும் போது, தேனி அமைச்சர் 30 சதவீதம் கமிஷன் கேட்கிறார் என்றார். அதனால் தான் தேனி மாவட்டம் ரயில் இல்லா மாவட்டமாக உள்ளது. நான் தேனி எம்.பி .யாக ஆனால், 6 மாதத்தில் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு தேனிக்கு ரயில் வரவழைப்பேன்" என்றார்.

 

ev

 

 தேனி அமைச்சர் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மறைமுகமாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.  சிலர் பிஞ்சிலே பழுத்தது போல இருக்கிறார்கள். நான் மரத்திலேயே பழுத்து கனிந்தவன் என மறைமுகமாக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரைத் தாக்கிப் பேசினார். 

 

நீங்கள் தேனிக்குப் புதுமுகமாக இருக்கிறீர்களே என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நடிகனாக இருந்தால் என்னை புதுமுகம் எனலாம். அரசியலில் தான் தேனிக்கு பழைய முகம்தான் என்று கூறினார்.