கிருஷ்ண பரமாத்மாவையும் அர்ஜுனனையும் அமித்ஷாவோடும் மோடியோடும் ஒப்பிட்டு, ரஜினி பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்கா பேசப்பட்டு வருகிறது. இது பற்றி விசாரித்த போது, ரஜினிக்கு அமித்ஷாவும் மோடியும் தொடர்ந்து முக்கியத்துவம் தர்றாங்க. அதனாலதான், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் "லிசனிங் லேர்னிங் அண்ட் லீடிங்' அப்படிங்கிற புத்தக விழாவிலும் பேசும் வாய்ப்பைக் கொடுத்தாங்க. விழாவில் அவருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுச்சுனு சொல்லப்படுகிறது. எப்படியாவது 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னாடி, ரஜினியைத் தீவிர அரசியலுக்கு கொண்டுவந்துடணும்னு பா.ஜ.க. நினைச்சி வியூகம் வகுக்குது.
வெங்கையா நாயுடு புத்தக விழாவில் கலந்துக்கிட்ட ரஜினி, காஷ்மீரின் சிறப்பு சலுகைகளை ரத்து செய்த காரணத்துக்காக அமித்ஷாவைப் பாராட்டு மழையில் நனைச்சிட்டார். இதனால் தான் கண்டுவரும் கனவுகள் விரைவில் தமிழகத்தில் பலிச்சிடும்னு பா.ஜ.க. நம்புது. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, தி.மு.க. எந்த வகையிலும் ஆட்சிக்கு வந்துடக் கூடாதுங்கிறதுதான் முக்கிய இலக்கு. தி.மு.க.வின் வெற்றியைத் தடுத்தால், அ.தி.மு.க.வைத் தங்கள் விருப்பம்போல இயக்கலாம். அதை ரஜினி மூலமா செய்யலாம்னு நினைக்குது. தங்கள் கொள்கையோடு ஒத்துப்போகக்கூடிய ரஜினியை தீவிர அரசியலுக்குக் கொண்டு வருவதற்கு பல ப்ளான் போடப்பட்டிருக்கு. ரஜினி புதுப்புது படங்களை ஒத்துக்கிட்டாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் களத்தைச் சந்திப்பேன்னும் சொல்லிக் கிட்டு இருக்கார்.
அதோட நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும், தேர்தல் முடிவு வந்த பிறகும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுத்தார். இப்ப நடந்து முடிஞ்ச வேலூர் இடைத் தேர்தலிலும் ரஜினி மக்கள் மன்றத்தினர், ரஜினியிடமிருந்து வந்த உத்தரவின் அடிப்படையில் இரட்டை இலைக்கு வாக்களிக்கணும்னு கூட்டம் போட்டுப் பேசியதோடு, பா.ஜ.க.வுக்கு நெருக்கமான இலை வேட்பாளர் ஏ.சி.எஸ்.சுக்கு ஆதரவா வாக்கு சேகரித்தாங்க. இதையெல்லாம் கவனிச்சித்தான், ரஜினியை மையமாக்கி, ஒரு அரசியல் மாற்றத்தை இங்கே ஏற்படுத்த பா.ஜ.க. விரும்புது. ரஜினியை சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அரசியல் கட்சியைத் தொடங்க வைச்சி, அதோடு அ.தி.மு.க. கூட்டணி அமைச்சா அது தி.மு.க.வுக்கு எதிரான பெரிய அணியா இருக்கும்ன்னு பா.ஜ.க. கணக்குப்போடுது.
அப்படி நடந்தால், பா.ஜ.க. நேரடி கூட்டணியில் இல்லாமல், திரைமறைவில் இருக்குமாம். ஒருவேளை, ரஜினியை முதல்வர் வேட்பாளரா ஏற்க அ.தி.மு.க. சீனியர் தலைவர்களும் நீண்டகாலத் தொண்டர்களும் விரும்பாமல் போனால், ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்தி, அதை ரஜினியும் பா.ஜ.க.வும் இணைந்த கூட்டணியுடன் சேர்த்து, தேர்தலை சந்திப்பதுன்னும் கணக்கு போடப்பட்டிருக்கு. எப்படிப் பார்த்தாலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ரஜினிதான் கிருஷ்ணராக கூட்டணித் தேரை ஓட்டப் போகிறார். சென்னை புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த அமித்ஷா ரஜினியை, தான் தங்கியிருந்த கவர்னர் மாளிகைக்கு அழைத்தாராம். அங்கே சந்திப்பது சரியா இருக்காதுன்னு ரஜினி மறுத்துட்டாராம்.