Skip to main content

தி.மு.க. நிர்வாகிகளால் அதிருப்தி... ஆக்ஷன் எடுக்க தயாரான மு.க.ஸ்டாலின்!

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

dmk


சமீபத்தில் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் ஆகியோர்களின் பேச்சுகளால் தி.மு.க.வுக்கு எதிராகப் பட்டியல் இன மக்களைத் திருப்பும் வேலையில் பா.ஜ.கவும் அ.தி..மு.க.வும் தீவிரமாக இருப்பதை தி.மு.க. உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இதனால் தி.மு.க. மீதான பொய் வழக்கை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்றால், அ.தி.மு.க அமைச்சர்களின் துறை வாரியாக ஊழல் புகாரைக் கையில் எடுக்க வேண்டும் என தி.மு.க தரப்பில் முடிவெடுக்கப் பட்டுள்ளதாம். அதாவது, உள்ளாட்சி அமைப்புகள் முதல் மாவட்ட நிர்வாகம் வரை தோண்டித்துருவ மண்டல வாரியாக தி.மு.க. வழக்கறிஞர் டீம் இதற்காகவே அமைக்கப்பட்டிருக்கிறது. 
 


அதே நேரத்தில், தி.மு.க. நிர்வாகிகள் கண்ட்ரோல் இல்லாம மேடையில், செல்போனில் லூஸ் டாக் விடுறதும் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. கவனமாகப் பேச வேண்டும் என்று எச்சரிக்கை குரலில் சொல்லியிருக்கிறார். தி.மு.க.வைப் பொறுத்தவரை இன்றைய தலைமுறையையும் சூழலையும் புரிந்து பக்குவமாக பேசுறதுக்கு கனிமொழி, ஆ.ராசா போன்றவர்கள் இருக்கிறார்கள். அவங்களை மீடியா முன்னாடி பேசுறதுக்கு தலைமை அனுமதித்தால், தேவையற்ற சிக்கல் வராது என்று தி.மு.க. வட்டாரங்களில் பேசி வருகின்றனர். 


 

 

சார்ந்த செய்திகள்