சென்னை மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. தலைமையிடம் விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சியை பட்டியல் இன மக்களுக்கான தொகுதியாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடியிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை மனுவை நேரில் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திருக்கார். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஆளும்கட்சித் தலைமையின் விருப்பத்தின் பேரில்தான் முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து இருக்கிறார் என்றும், 3 மாநகராட்சித் தொகுதிகளைக் கேட்டு வலியுறுத்தும் பா.ம.க.வுக்கு செக் வைக்கும் விதமாத்தான், சிறுத்தைகளுக்கு இந்த சந்திப்பின் மூலம் எடப்பாடி டோரைத் திறந்து இருக்கிறார் என்றும், இந்த சந்திப்பை வைத்து, ஒரு விறுவிறு தகவல் பரபரப்பா கிளம்பியுள்ளது.
மேலும் இது பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் விசாரித்த போது, சென்னை மாநகராட்சியில் பட்டியல் இனமக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி.ஆனால் பொதுத் தொகுதியாவே வைத்துள்ளார்கள். எனவே இதைத் தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் கோரிக்கை வைத்தோம் , தற்போது அ.தி.மு.க, ஆட்சியிலும் கோரிக்கையை வைத்துள்ளோம். அதுக்காகத்தான் இந்த சந்திப்பு நடந்தது என்கின்றனர். பொதுவாக பட்டியல் இனமக்கள் அதிகம் வாழும் தொகுதி என்று ஒன்னு இருந்தால், அதைக் கூறுபோட்டு அக்கம் பக்கம் இருக்கும் மற்ற சமூகத்தினர் பெரும்பான்மை உள்ள பகுதிகளோடு சேர்த்து பொதுத் தொகுதியாக மாற்றும் வேலை இப்போதும் நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் இப்படிப்பட்ட சிக்கல்களைக் தீர்க்க வேண்டும் என்று தான் நாங்க போராடி வருகிறோம் என்று கூறுகின்றனர். அரசியல் களத்திலோ, பா.ம.கவுக்கு வி.சி.க மூலமா எடப்பாடி வைத்த செக், தி.மு.க. இளைஞரணிச்செயலாளர் உதயநிதிக்கு பிரேக் போடுற மாதிரி வந்து விட்டதே என்று செம்ம டென்ஷன் அறிவாலயம் பக்கம் தெரியுது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.