Published on 09/09/2020 | Edited on 09/09/2020
திமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று (09.09.2020) காலை 10 மணிக்கு துவங்கியது. பொதுச் செயலாளா் பதவிக்கு துரைமுருகன், பொருளாளா் பதவிக்கு டி.ஆா்.பாலு ஆகியோர் மட்டுமே மனு அளித்திருந்தனர். இதனால், இருவரும் போட்டியின்றி ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று காலை நடைபெற்ற பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், பொருளாளராக தேர்வான டி ஆர் பாலுவுக்கும் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
திமுகவின் 4 வது பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 8 வது பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளருக்கான அதிகாரத்தை மீண்டும் பொதுச்செயலாளரிடமே ஒப்படைக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.