Skip to main content

மூச்சு முட்டி நின்ற திமுக கவுன்சிலர்களின் திக் திக் நிமிடங்கள்! 

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

DMK councilors who were out of breath!

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகராட்சியின் 30 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி 12, அ.தி.மு.க. 12 என சமபலத்திருந்தாலும், மன்றத் தலைவர் பதவியைக்குறிவைத்து தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் போட்டியிட பரபரப்பான நகராட்சி. கழகங்களுக்கு 4 கவுன்சிலர்கள் தேவைப்பட்டாலும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மீதமுள்ள வார்டுகளைக் கைப்பற்றிய சுயேட்சைகள் 5, எஸ்.டி.பி.ஐ. 1 என 6 பேர்களில் நான்கு உறுப்பினர்களை வளைத்துக் கொண்டு போவதில் தீவிரமாயினர்.

 

எதிரி நான்கு உறுப்பினர்களை வளைப்பதற்குள், முந்திக் கொண்ட தி.மு.க., சுயேட்சைகள், எஸ்.டி.பி.ஐ. என ஒட்டு மொத்த ஆறு பேர்களையும் தேவையான, திருப்தியான டீலிங்க்குகளுடன் தன் வசமாக்கிப் பொத்தி பாதுகாத்துக் கொண்டது. இந்த ஆறு பேர்களுக்கான மொத்த கிப்ட்களின் தொகை ஒரு “சி“யையும் தாண்டிவிடும் ஒரு வழியாக டேர்ம்ஸ் மூலம் அது சரிக்கட்டப்பட்டு, பெறப்பட்ட தொகையினை பிற்பாடு வருகிற நகரின் காண்ட்ராக்ட் வேலைகளின் டீலிங்க்கின் மூலம் அட்ஜஸ்ட் செய்து திரும்ப அடைத்துவிட வேண்டும் என்பதே திட்டமாம்.

 

இந்த வழிகளில்தான் தி.மு.க.விற்கான பலம் 18 என்றானது. அதே சமயம் தி.மு.க. உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்த உடனேயே 12 கவுன்சிலர்களும் குற்றாலம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தலைமையில் நடந்த கூட்டத்தில், சேர்மன் பதவிக்கென்று தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும். மாற்றி வாக்களித்தால் அவர்களுக்கு தேர்தல் செலவாக கட்சி, கொடுத்த தொகையைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கறாராகப் பேசப்பட்டதாம். தவிர சேர்மன் பொறுப்பை வசப்படுத்த தேவையான சுயேட்சைகளை நம் பக்கம் கொண்டுவருவதற்கு பெரிய தொகை செலவாகியிருக்கிறது அதனை வரும் காலங்களில் நகராட்சியின் டெண்டர் காண்டிராக்ட்களின் கொசுறு மூலமே சரிக்கட்ட வேண்டிய நிலை என்பதால், கவுன்சிலர்கள் யாரும் ஒருவருடம் காண்ட்ராக்ட், கமிசன்களில் கண்டிப்பாகத் தலையிடக் கூடாது என்று கண்டிப்பான கட்டளையும் விடப்பட்டுள்ளதாம். நிலைமை இப்படிப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் சேர்மன் பதவி பொது என்றாகிவிட்டது. அதனால் வைஸ்சேர்மன் பதவியை நகரின் அடுத்த மெஜாரிட்டி எண்ணிக்கையிலிருக்கும் எங்கள் பட்டியலின சமூகத்திற்கு ஒதுக்கவேண்டும் என்று தி.மு.க.வின் பட்டியலின சமூக கவுன்சிலர்கள் கோரிக்கையை வைக்க, இதனையும் சந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளிப்பட்டிருக்கிறது தி.மு.க.


இதற்கிடையே தி.மு.க.வின் மூவ்களை உளவு பார்த்த அ.தி.மு.க. தரப்புகள், தி.மு.க.வின் கூடாரத்திற்குள்ளேயே புகுந்து உள்ளடியாக 3 கவுன்சிலர்களை தங்கள் பக்கம் சைலன்ட்டாகத் திருப்பியிருக்கிறது. மறைமுகத் தேர்தல் நாள் தவிப்பும் பதற்றமுமாக இருந்தது.

 

DMK councilors who were out of breath!
உமா மகேஸ்வரி

 

அன்றைய தினம் தி.மு.க. தரப்பில் 18 கவுன்சிலர்களும், அ.தி.மு.க. தரப்பில் 12 என்ற அளவில் வந்திருக்கிறார்கள். தி.மு.க. தரப்பில் வெற்றி உறுதி என்றிருக்க, கட்சி அறிவித்தபடி தி.மு.க. தரப்பில் உமா மகேஸ்வரியும், அ.தி.மு.க தரப்பில் முத்துலெட்சுமியும் சேர்மன் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ததையடுத்து ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டதில், இரண்டு கட்சிகளுமே 15 என்ற சம அளவில் வாக்குகளைப் பெற தி.மு.க. தரப்பிற்கு ஷாக். சேர்மன் பொறுப்பை உறுதிசெய்ய முடியாத நிலை உருவாகியிருக்கிறது. இதையடுத்து தேர்தல் அதிகாரியான ஜெயப்பிரியா இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களின் சம்மதத்துடன் திருவுளச்சீட்டுப் போட, திக் திக் நொடியில் திருவுளச் சீட்டில் தி.மு.க.வின் உமா மகேஸ்வரியின் பெயர் வர அவர் நகர்மன்றத் தலைவியான பிறகே தி.மு.க.வினரின் சுவாசம் சீராகியிருக்கிறது. அதே சமயம் தங்களின் 18 கவுன்சிலர்களில் 3 பேர் விலை போய் அ.தி.மு.க.விற்கு வாக்களித்தது கண்டு தி.மு.க.விற்கு டன் கணக்கில் அதிர்ச்சி.

 

மாலையில் வைஸ் சேர்மன் தேர்வின்போது தி.மு.க.வின் பட்டியலின சமூகப்பிரிவு கவுன்சிலர்கள் அப்பதவியைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பை வலியுறுத்த, அவர்களை தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வான ராஜா சமாதானப்படுத்தியிருக்கிறார். வைஸ் சேர்மன் தேர்வின்போது தி.மு.க. தரப்பில் சரவணக்குமாரை வைஸ் சேர்மன் பொறுப்பிற்கு நிறுத்த அ.தி.மு.க.வின் தரப்பில் வைஸ் சேர்மன் பதவிக்கு கண்ணன் போட்டியிட, இறுதியாக வாக்கெடுப்பில் தி.மு.க. 13 வாக்குகளைப் பெற, அ.தி.மு.க.வோ 16 வாக்குகளைப் பெற்று அ.தி.மு.க.வின் கண்ணன் வைஸ் சேர்மனாகிவிட்டார்.

 

tt
கண்ணன்

 

காலையில் நடந்த சேர்மன் தேர்வில் தி.மு.க. 15 கவுன்சிலர்களின் வாக்குகளைப் பெற்ற நிலையில் மாலையில் வைஸ் தேர்வில் தி.மு.க. தரப்பு கவுன்சிலர் ஒருவர் (புனிதா) வராமல் போக, அடுத்து தி.மு.க. தரப்பிலிருந்து ஒருவர் அணிமாறி அ.தி.மு.க.விற்கு வாக்களிக்கவே அ.தி.மு.க. 16 வாக்குகளைப் பெற்று வைஸ் பதவியைப் பிடிக்க, தி.மு.க அதனை இழக்க நேரிட்டுள்ளது என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்