Published on 12/03/2021 | Edited on 12/03/2021
![Edappadi palanisamy](http://image.nakkheeran.in/cdn/farfuture/zY3OchVczYz_20wtoVcgAAINUUnTu46-po0k1zzL-t8/1615517932/sites/default/files/inline-images/r5y45456.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன.
சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (12.03.2021) காலை 11 மணிக்கு துவங்க இருக்கிறது. இந்நிலையில், வரும் மார்ச் 15ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே 15ஆம் தேதி மற்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.