Published on 17/06/2019 | Edited on 17/06/2019
நாங்குனேரி தொகுதி இடைத்தேர்தல் விவகாரம் காங்கிரஸுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .சமீபத்தில் திருச்சி பொதுக்கூட்ட மேடையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய உதயநிதி, காங்கிரஸ் திருநாவுக்கரசரைப் பார்த்து, இப்ப காலியா இருக்கும் நாங்குனேரி தொகுதியைக் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் விட்டுத் தரணும்னு கோரிக்கை வச்சிருக்கார். ஆனால் காங்கிரஸ் நிர்வாகிகளோ, போனமுறை காங்கிரஸ் ஜெயித்த நாங்குனேரியில் காங்கிரஸே நிக்கணும்னு நினைக்கிறாங்க. அதே நேரம், அந்தத் தொகுதியில் போன முறை ஜெயித்து எம்.எல்.ஏ.வானவரும் தற்போதைய காங்கிரஸ் எம்.பி.யுமான வசந்தகுமாரோ, தொகுதியை தி.மு.க.வுக்குக் கொடுத்திடலாம்ன்னு தங்கள் கட்சித் தலைமையிடம் சொல்றாராம்.
ஏனென்றால், தொகுதி காங்கிரஸுக்கேன்னு ஒரு நிலை ஏற்பட்டால், அங்கு நிறுத்தப்படும் வேட்பாளருக்கான செலவு பண்ணும்படி கட்சித் தலைமை பொறுப்பு கொடுத்திடும்னு யோசிச்சிதான், தி.மு.க. பக்கம் தள்ளி விடப் பார்க்குறாராம். நாங்குனேரியை விட்டுத் தரக்கூடாதுன்னு காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லியில் சோனியா, ராகுல் வரை மனு அனுப்பிக்கிட்டிருக்காங்க. இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதத்துக்குள் அறிவிக்க இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைமையும், திமுக தலைமையும் என்ன முடிவு எடுக்கும் என்று இரண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.