Skip to main content

மோடியின் பழைய பேச்சைக் கிளரும் காங்கிரஸ்! சூடுபிடிக்கும் சூர்ப்பனகை விவகாரம்

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

congress former union minister against for modi old parliament speech

 

மோடிக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சௌத்ரி தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் முன்தினம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

 

இதனைத் தொடர்ந்து நேற்று ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை மோடி அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா, ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சௌத்ரி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், "2018 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் மோடி என்னை ராமாயணத்தில் வரும் பெண் கதாபாத்திரமான சூர்ப்பனகை என்று அவதுறாக வர்ணித்துப் பேசியிருந்தார். இதனால் அவர் மீது தற்போது அவதூறு வழக்கு ஒன்றை தொடரப் போகிறேன். இந்த வழக்கில் நீதிமன்றம் எவ்வளவு விரைவாகச் செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்" என்று பேசி இருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்