Skip to main content

“பாஜக மீண்டும் அதைச் செய்யத் தயங்காது” - அண்ணாமலை திட்டவட்டம்

Published on 01/01/2023 | Edited on 01/01/2023

 

"BJP won't hesitate to do it again" Annamalai scheme

 

தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டால் பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில், “1967 ஆம் ஆண்டு, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது அதன் சொந்த பலத்தில் அல்ல. சுதந்திரா கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகளுடனான கூட்டணியின் காரணமாகத்தான். 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே.

 

1967லிருந்து, திமுக ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது. இப்படி பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும் நீங்கள் படுமோசமான தோல்வியை சந்தித்த தேர்தல்களும் உண்டு.

 

பிரதமர் மோடி தலைமையில், பாஜக 2024 ஆண்டு தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறும். பாஜக கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா?” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்