முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைப் போன்று, தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாக உள்ளார். தி.மு.க தனது இலவச இணைப்பில் உள்ள இரு கட்சிகளைக் கழற்றிவிட்டால், அது அவர்களுக்கு நல்லது" என்று எச்.ராஜா பேசியிருந்தார். இந்த நிலையில் 2ஜி வழக்கை விசாரித்த நீதிபதி ஓபி சைனி விரைவில் ஒய்வு பெற இருப்பதால் அந்த வழக்கை சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் அமர்வுக்கு மாற்றியுள்ளது. நீதிபதி அஜய் குமார் தான் தற்போது ப.சிதம்பரம் வழக்கை விசாரித்து வருகிறார் என்பது குறிப்படத்தக்கது. ஏற்கனவே 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராஜா, தயாநிதி மாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நிலஉச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறியதாக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வரும் 23 ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், திமுக இல்லாத வேறு கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். வேறு கட்சியை சேர்ந்த நான்கு வேட்பாளர்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு தேர்தலில் வேட்பாளர்களை விட சின்னங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அப்படி இருக்கும் போது உறுப்பினராக இல்லாத நபர் அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா?" என கேள்வி எழுப்பினர். மேலும் இது குறித்து தேர்தல் ஆணையம், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரே நேரத்தில் திமுக எம்.பி.க்களை குறிவைத்து நடக்கும் விதத்தை பார்க்கும் போது பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சமீப காலமாக ஒரு எதிர்க்கட்சி தலைவர் கைதாக போகிறார் என்று அடிக்கடி பேசி வருவது குறிப்படத்தக்கது.