அண்மைக் காலமாக செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசு மீதும், தமிழக காவல்துறை மீதும் குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ''காவல்துறையினரை மாநில அரசு சுதந்திரமாகச் செயல்பட விட வேண்டும். திமுக மாவட்டச் செயலாளர்கள் தான் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. சுயலாபத்திற்காக திமுக சொல்வதை அப்படியே கட் காபி பேஸ்ட் செய்கிறது காங்கிரஸ்.
இந்தி திணிப்பிருந்தால் பாஜகவும் எதிர்க்க தான் போகிறது. புதிய கல்விக் கொள்கையில் ஆப்ஷன் இருக்கிறது. இந்தியை நீங்கள் படிக்க வேண்டாம். தமிழ் கண்டிப்பாகப் படிக்க வேண்டும், ஆங்கிலம் கண்டிப்பாகப் படிக்க வேண்டும், மூன்றாவது மொழியை நீங்களே தேர்ந்தெடுங்கள். இதைச் சொன்னால் உடனே பாஜக பின் கதவு வழியாக உள்ளே வருகிறது என்பார்கள். இதுபோன்ற ஆதாரம் இல்லாமல் பேசுபவர்களுக்கு நாம் என்ன சொல்வது'' என்றார்.