Skip to main content

அடித்து உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்; கர்நாடகத்தில் பரபரப்பு 

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

A battered voting machine; Sensation in Karnataka

 

கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு இன்று (மே 10, 2023) தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ளன.

 

தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோவன் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். வருணா தொகுதியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரும் போட்டியிடுகின்றனர். கல்புர்கி மாவட்டம் சித்தாபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கேவும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி சன்னப்பட்டினா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். எச்.டி.தேவகவுடா பேரன் நிகில் குமாரசாமி ராமநகரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

 

பிற்பகல் 3 மணி நிலவரப்படி கர்நாடகத்தில் 52.03% வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக விஜயபுரா மாவட்டத்தில் பசவன பகேவாடி தாலுகாவில் மசபினால் கிராமத்தில் கிராம மக்களுக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதாக வதந்திகள் பரவியதை அடுத்து கோபமடைந்த கிராம மக்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து உடைத்தார்கள். தேர்தல் அதிகாரிகளின் கார்களும் கவிழ்க்கப்பட்டு சேதங்களுக்கு உட்படுத்தப்பட்டன. 

 

அதேபோல் பத்மநாபநகர் பகுதிகளிலும் சில இளைஞர்கள் தங்களுடைய எதிரிகள் மீது வாக்குச்சாவடியிலேயே தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் வாக்களிக்க காத்திருந்த பெண்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். அதேபோல் பல்லாரி மாவட்டத்திலும் காங்கிரஸ் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்