Published on 07/10/2020 | Edited on 07/10/2020

அரியலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.ம.மு.க அமைப்புச் செயலாளருமான பாளை து.அமரமூர்த்தி, தொழிலதிபர் ஸ்ரீதர், கண்டிராதித்தம் ஊராட்சி மன்றத் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று இணைந்தனர்.
இந்த நிகழ்வின்போது தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரியலூர் மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், திருமானூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கென்னடி ஆகியோர் உடனிருந்தனர்.