Published on 22/02/2019 | Edited on 22/02/2019
மக்களவை தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழ்நாடு வருகிறார்.

இன்று காலை 10.15க்கு தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தனியார் கல்லூரி நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட 18 மக்களவை தொகுதி நிர்வாகிகளுடன் பேச இருக்கிறார். பின் இராமநாதபுரம் செல்கிறார். அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் இந்த சந்திப்பு கட்சி நிர்வாகிகளிடையே முக்கியமாக பார்க்கப்படுகிறது.