கரோனா பரவலால் கடந்த மாதம் இந்தியா முழுவதும் ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏறத்தாழ 70 எம்.பி.க்கள். இன்னும் பதவி ஏற்கவில்லை. இது பற்றி விசாரித்த போது, நம் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்களான திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ மற்றும் அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களான கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் உள்பட இந்தியா முழுவதும் 70-க்கும் மேற்பட்ட ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வாகியிருக்கிறார்கள். இவர்கள் யாரும் இன்னும் முறைப்படி பதவி ஏற்கவில்லை. கரோனா தாக்கத்தால்தான் பதவி பிரமாண நிகழ்ச்சி நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
மேலும் 20-ந் தேதிக்குப் பிறகு ஊடரங்கில் பல்வேறு தளர்வுகள் நடக்க இருப்பதால், அந்தக் காலகட்டத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டி ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்த முயற்சிகள் நடக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் ராஜ்யசபா சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு ஆலோசிச்சிருக்கார். அதனால் 25-ந் தேதிக்குப் பிறகு பதவியேற்பு வைபவம் நடக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.