Skip to main content

கிறிஸ்துமஸ் ட்ரீ குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார். அதில், பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 

bjp

 


இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிதவித்துள்ளார். அதில் "நிறைய அசிங்கமான பொம்மைகள் இருக்கிற இடத்தை ஆசையோட பாக்க வந்த அண்ணனுக்கு ஒரு ஓ போடுங்க" என்று கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது ஒருவர் கிறிஸ்துமஸ் ட்ரீ முன்பு கையில் ஒரு பந்துடன் பேசும் போது அவர் பின்னாடி இருந்த கிறிஸ்துமஸ் ட்ரீ எதிர்பாராத விதமாக அவர் மீது விழுந்தது. இந்த நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகர், அதில் கன்யாகுமாரியில் ஆரம்பித்த வியாபாரக் கூட்டணி  தூத்துக்குடியில் பிளந்து,புதுக்கோட்டையில் முறிந்து சென்னையில் வேரோடு விழுந்தது என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்பாராத விதமாக நடந்த செயலுக்கு இப்படி கருத்து தெரிவிக்கலாமா என்று சமூக வலைத்தளங்களில் கருத்து கூறிவருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்