உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.7 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85,000-ஐ கடந்துள்ளது. இதனையடுத்து மருத்துவ ஊழியர்கள் கரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோ குளோரோகுயினை எடுத்துக்கொள்ளலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்த நிலையில், இம்மருந்தினை தங்களுக்கு இந்தியா வழங்க வேண்டும், மருந்தை அனுப்பாவிட்டால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார். உலகம் முழுவதிலும் விற்பனையாகும் இந்த ஹைட்ரோ குளோரோகுயின் மருந்தில் 70 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் சூழலில், மனிதாபிமான அடிப்படையில் இந்தியத் தேவைக்குப் போக, கூடுதல் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டது.
தமிழக கம்யூனிஸ்டுகளின் காதுகளில் பஞ்சு. “”உலக சுகாதார நிறுவனம் மற்றும் சீனா மீது அமெரிக்கா அதிபர் கடும் தாக்கு””
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) April 8, 2020
இந்தியாவின் இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "அசாதாரண நேரங்களுக்கு நண்பர்களிடையே இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. HCQ குறித்த முடிவுக்கு இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இதனை எப்போதும் மறக்க மாட்டேன். இந்தப் போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கே உதவி புரிந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவை மிரட்டும் வகையில் அமெரிக்கா அதிபர் பேசியதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "தமிழக கம்யூனிஸ்டுகளின் காதுகளில் பஞ்சு. உலக சுகாதார நிறுவனம் மற்றும் சீனா மீது அமெரிக்கா அதிபர் கடும் தாக்கு என்று கூறியுள்ளார்". இந்தக் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.