சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.வில் மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் வெளியிட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மற்றும் திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, மத்தி ஆகிய மாவட்டங்களின் மண்டல பொறுப்பாளராக, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தஞ்சை தெற்கு, வடக்கு, திருச்சி மாநகர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கங்களுக்கு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம். சேலம் மாநகர், புறநகர் மாவட்டங்களுக்கு பொன்னையன். ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தம்பிதுரை. திண்டுக்கல் மேற்கு மாவட்டத்துக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு புறநகர், தென்சென்னை வடக்கு (மேற்கு), தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன். திண்டுகல் கிழக்கு, விருதுநகர் கிழக்கு, மேற்கு மாவட்டங்களுக்கு நத்தம் விஸ்வநாதன், நாமக்கல், ஈரோடு மாநகர், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டங்களுக்கு அமைச்சர் தங்கமணி. கோவை புறநகர் தெற்கு, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைச்சர் வேலுமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடசென்னை தெற்கு (கிழக்கு,மேற்கு) மாவட்டங்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார். புதுச்சேரி மாநிலத்துக்கு செம்மலை, அமைச்சர் சம்பத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்டங்களுக்கு தளவாய்சுந்தரம். மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டங்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் கிழக்கு, மேற்கு மாவட்டங்களுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம். தருமபுரி, திருவண்ணாமலை வடக்கு மாவட்டங்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் காமராஜ் வசம் திருவாரூர், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல, அமைச்சர் ஓ.எஸ். மணியனிடம் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களும், முன்னாள் அமைச்சர் வளர்மதியிடம் சென்னை புறநகர், செங்கல்பட்டு மேற்கு மாவட்டங்களும், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகரிடம் வடசென்னை வடக்கு (கிழக்கு, மேற்கு ) மாவட்டங்களும், கோகுல இந்திராவிடம் காஞ்சிபுரம் மாவட்டமும் தரப்பட்டுள்ளது.
அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியனிடம் தென்சென்னை வடக்கு(கிழக்கு), தென்சென்னை தெற்கு(கிழக்கு) மாவட்டங்களும், அமைச்சர் உதயக்குமாரிடம் மதுரை புறநகர் மேற்கு, தேனி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் சம்பத்திடம் கடலூர் மத்தி, அமைச்சர் வீரமணியிடம் திருப்பத்தூர், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கரூர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டங்களும், அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு, சிவகங்கை மாவட்டங்களும், அமைப்புச் செயலாளர் மோகனிடம் திருவண்ணாமலை தெற்கு மாவட்டமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாநகர், வேலூர் புறநகர் மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளர் சுப்பிரமணியன். செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்திற்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். திருவள்ளுர் வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கு தொழிற்சங்க பேரவை செயலாலர் கமலக்கண்ணன் ஆகியோர் மண்டல பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.