Published on 15/03/2019 | Edited on 15/03/2019
2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எந்தெந்த தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது என்பதை இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நீலகிரி, பொள்ளாச்சி, தென்காசி, தஞ்சாவூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.