
சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜக்பந்து சாஹு (28). இவர் சில தினங்களுக்கு முன் காணாமல் போனதாக போலீசிடம் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், ஜக்பந்து சாஹுவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிரா செல்லும் இண்டரிசிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலி கழிப்பறையில், ஜக்பந்து சாஹு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த போலீசார், மகாராஷ்டிரா கோண்டியா பகுதியில் உள்ள ரயில் நிலையத்துக்குச் சென்று ஜக்பந்துவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஜக்பந்து தனது நண்பருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ மெசெஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில், ‘எனது காதலியும் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் தான் என்னுடைய தற்கொலைக்கு காரணம். அவர்களின் நடவடிக்கைகளால் தான் என்னை தற்கொலை செய்ய தூண்டியிருக்கிறது. காதலியான அந்த பெண்ணை, திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால், அவர்கள் எனது வீட்டில் பிரச்சனை செய்துவிட்டார்கள். அவர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த தகவலின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் கழிவறையில் இளைஞர் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.